Friday 18 April 2008

Phoenix பறவை...

என் காதலை சொன்ன நிமிடத்தில்
உன் கோப பார்வையில் என்னை எரித்துவிட்டாய்
உனக்கு தெரியாதா நான் Phoenix பறவை என்று?

Wednesday 16 April 2008

கண்ணீர்...

உலகில் மிகவும் விலை உயர்ந்த பொருள்
உன் கண்ணீர் என்று இன்று தான் கண்டு கொண்டேன்
நேற்று நீ சிந்திய இரு துளி கண்ணீரால்
என் வங்கி கணக்கில் இரண்டு லட்சம் காணாமல் போனது
நீ கேட்ட வைர அட்டிகை என் சட்டைப்பையில்

Monday 14 April 2008

முதிர்கன்னிகள்...

வரதட்சணை பணம் பார்த்தபின் தாலி கட்டும்
ஆண் விபச்சாரிகள் இருப்பதாலே
பல கண்ணகிகள் முதிர்கன்னிகளாக இருக்கிறார்கள்

முதியோர் இல்லம்...

சரஸ்வதி முதியோர் காப்பகம்
பெயர் பலகையை பார்த்தும் பளீர் என்று இதயத்தில் ஒரு வலி
அப்பா அட்மிஷன் வாங்கிட்டேன்
மாதம் ஒரு முறை வந்து பார்த்துட்டு போகிறேன்
புன்னகையுடன் என் மகன் என்னிடம் கூறினான்
முப்பது வருடத்திற்கு முன்னால் நான் கூறிய அதே வார்த்தைகள்
ஒரு சின்ன சந்தோஷம் என் பேரன் இன்று இங்கே இல்லை

Friday 11 April 2008

அகதி...

விடுமுறைக்கு நீ ஊருக்கு சென்றாய்
என் மனதுக்குள் நான் நாடு கடத்தப்படேன்
இன்னும் எத்தனை நாள் இந்த அகதி வாழ்க்கை
என் தாய்நாடே உன்னை எப்போது காண்பேன்?

சிலுவை...

உன் திருமண அழைப்பிதழ் கொண்டு
என்னை சிலுவையில் அறைந்தாய்
மூன்று வருடங்கள் ஆகிவிட்டது
இன்னும் உயிர்த்து எழவில்லை நான்.

Wednesday 9 April 2008

Appraisal Rating …

Can anyone tell me the secret of getting good rating during the performance rating?

I am damn sure that it is not at all related to Performance, Hardwork etc (at least in majority of the cases).

நண்பன்...

எனக்காக என் கண்களே அழாத வேளையில்
உன் கண்கள் குளமாயின
உதவி கேட்க என் நா உதவாத போது
எனக்கு உதவ நீ ஓடி வந்தாய்
சந்தோஷத்தில் நான் குதுகளித்த போது
ஓரமாய் நின்று ஓசை இல்லாமல் நீ ஆனந்தம் அடைந்தாய்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை நேசிக்கும் உன்னை பெற என்ன
தவம் செய்தேனோ?

Tuesday 8 April 2008

சூரியகாந்தி...

உன் முகம் பார்த்தால் மலர்கின்றேன்
நீ போகும் திசை எல்லாம் திரும்பி பார்க்கின்றேன்
நீ வராமல் போனால் வாடிபோகின்றேன்
என் சூரியன் நீ, என்னை சூரியகாந்தியாய் மாற்றியவள் நீ...

சர்வாதிகாரி...

என் அழுகை, கோபம், தாபம், திமிர் என்று
எல்லாவற்றையும் உன் ஒரு பார்வையால் அடக்கிவிடும்
உன் கண்கள் தான் இந்த உலகத்தின் மிக பெரிய
சர்வாதிகாரியோ??

Snowfall…







On a lazy Sunday morning @ around 8 30 am I heard my friend knocking my room door, I was not in a mood to get up from the bed however when he asked me to take a look at the streets from my window I know what he is talking about. Yes, it is snowing beautifully outside.

Moment I realised that it is snowing outside I jumped from my bed and came out of my room searching for camera and battery. I took my camcorder, digi cam and came down running with my friend.

I was in cloud nine when I saw snow. All these years I never seen snow and was longing for the same. I took more than 100 snaps and enjoyed the moment thoroughly. We played like kids in the snow and I got no words to describe the happiness. A long time wish of mine came true this Sunday.

Trip to Birmingham …




As the first experience of renting a car in UK and driving in the motorways without Sat Nav was a huge success we planned to repeat the same one more time. This time we planned our trip to Balaji Temple in Birmingham.

Last time we took a MPV (Vauxhall Zafira) so we decided to hire sedan model for this trip. My friend called the rental agency and booked a Ford Mondeo and confirmed all the details. We (I & my manager) went to the rental agency on Friday evening only to hear that they don’t have Ford mondeo available at that point of time and they only have the Vauxhall Zafira (Which we already rented for the first trip).

I was irritated by this and thought of cancelling the whole plan. After few minutes of negotiations we got Ford focus. I went to the gas station to fill the tank and then parked the vehicle in the nearest parking lot. We planned to start early in the morning @ around 6 30 am so that we can reach the temple on time. We also expected a huge crowd in the temple so wanted to be there at the earliest to get a good dharshan.

The next day morning we all got up by 7 am and started only by 9 30 am. We don’t have GPS with us and all we have it to follow the printed route that we got from Google map. I know the route to reach M3 and from there I need to depend on the Google map to catch M40. We need to catch M40 and drive close to 90 miles in M40 to reach Birmingham.

Somehow we got into M40 and I accelerated so that we can reach our destination soon. After driving for more than 25 miles we realised that we are driving in the wrong direction (Thanks to umesh who navigated us to this direction as always). Whenever umesh has Map in his hand we are assured that we will miss an exit or will drive in wrong direction.

I took an exit from M4 and then took a U turn. We drove all the way back to M3 and merged into M40 (this time in the correct direction) towards Birmingham. M40 was congested this time because of an accident. We lost more than an hour because of the traffic and umesh.

After few miles of drive in M40 we took a break and had breakfast in the Burgerking. We relaxed for sometime and then started your travel. We reached Birmingham by 1 30 pm and found the temple without much of a trouble.

The temple was nice and calm. It was built in a traditional way and was very pleasant to our eyes. We had nice dharshan of Lord Balaji and spent more than an hour in the temple. We had dharshan of Vinayagar, Hanuman, Lakshmi & Murugar which made all of us really happy.

We started from the temple by 2.30 pm and again thanks to umesh I took a wrong exit in a roundabout only to drive 10 more miles before hitting M40 towards London. The return journey was nice and cool as there was no heavy traffic. I got into the right most lanes and once again clocked my highest speed in UK motorway (more than 200 km/hr).

The total trip was around 350 miles and we came home safely by 6 pm in the evening. Overall it was a good experience and superb drive.

Friday 4 April 2008

கவிஞன்...

உலகில் ஒருவர் போல் ஏழு பேர் இருக்கிறார்கள்
ஆனால்
உன்னை போல் ஓராயிரம் பேர் இருக்க வேண்டும்
இல்லையென்றால் எப்படி இத்தனை கவிஞர்கள்?

Thursday 3 April 2008

குளிர்...

உனக்கு குளிர்கிறதா சொல்
சூரியனை இரவிலும் வர சொல்கிறேன் ...

Tuesday 1 April 2008

I Phone ...

உன் கையில் பார்க்கும் போது தான்

IPhoneம் அழகாய் தெரிகிறது !!

பெண்ணே !!

உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும்

நான் இரு முறை பிறக்கிறேன்

காதலனாய்... கவிஞ்சனாய்...