Wednesday, 16 July 2008

மெழுகுவர்த்தி

நீ தீண்டியதும் தீப்பிடித்து கொண்டேன்

உன் நினைவுகளால் சுடர் விட்டு எரிகிறேன்

பசி, தூக்கமின்றி உடல் மெலிந்து

உன்னை நினைத்து உருகிப்போகின்றேன்

மெழுகுவர்த்தியாய்.

Wednesday, 9 July 2008

அம்மா...

எனக்கு உயிர் கொடுத்து,
பத்து மாதங்கள் உன் கருவறையில்
என்னை பாதுகாத்து, பத்தியம் இருந்து,
ஈன்றெடுத்த நொடியில் மறுபிறவி எடுத்தாய்.

என் அழுகையின் அர்த்தம் புரிந்து
பாலுடினாய், ஈரத்துணி மாற்றினாய்,
கடிக்கும் எறும்பை அகற்றினாய்,
முத்தம் இட்டு நீ இருப்பதை உணர்த்தினாய்.

பள்ளி செல்லும் வயதில் என் ஆசானாய்,
என் மழலையின் முதல் ரசிகனாய்,
என்னை அலங்கரித்து, என்னை சுமக்கும் சேவகனாய்,
என்னக்காகவே வாழும் அடிமையாய் இருந்தாய்.

என் வெற்றியின் ரகசியமாய்,
தோல்வியில் துயலும் பொழுது என் தோழனாய்,
நல்லது தீயதை சொல்லித்தரும் வழிகாட்டியாய்,
என் வாலிப பருவத்தில் இருந்தாய்

இன்று நான் என் சொந்த காலில் நிற்பதாய் நினைக்கின்றேன்.
இன்றும் எனக்காக துடிக்கும் என் இதயமாய்,
என்னை இயங்க வைக்கும் என் சுவாசமாய்,
எனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்.

நீ துவண்டு நின்று நான் பார்த்ததில்லை,
உனக்காக வாழ்ந்ததாய் நினைவுகள் இல்லை,
என்னை வெறுத்ததாக அறிந்ததும் இல்லை,
கைமாறாக எதையும் நீ எதிர்பார்த்தது இல்லை.

உன்னை பெற நான் என்ன தவம் செய்தேன்?
இந்த நன்றிக்கடனை எந்த ஜென்மத்தில் தீர்ப்பேன்?
அன்னையே உன்னை வணங்குகிறேன்.
உன்னை கொடுத்த இறைவனுக்கும் நன்றி சொல்கிறேன்.