Thursday, 21 August 2008

காதல்...

இன்று காலை எழுந்ததில் இருந்து ஆனந்த் ரொம்பவே பரபரப்பாக இருந்தான். கண்ணாடியில் அவன் முகம் பார்த்து வெட்கப்பட்டு கொண்டான். இன்றோடு பத்து வருஷம் ஆகுது லாவன்யாவை பார்த்து.

பார்த்த முதல் நாளே அவள்மேல் காதல் கொண்டான். இந்த பத்து வருசத்துல நெறைய பேசியாச்சி, பழகியாச்சி ஆனா தன்னோட காதல சொல்ல இன்னும் ஆனந்துக்கு தைரியம் வரவில்லை. "எப்படியாவுது இன்னிக்கி லாவண்யா கிட்ட சொல்லிடனும்" தனக்கு தானே சொல்லிக்கொண்டான். லெட்டர், ஒரு ரோஜா ரெண்டுமே இருக்கு எப்படியும் இன்னிக்கி சொல்லிடனும் - மனதுக்குள் சபதம் எடுத்துக்கொண்டான்.

நேத்து இரவு முழுக்க இதே சிந்தனை தான் - எப்படி ஆரம்பிக்கறது? தப்பா நெனசிட்டா ? மறுபடியும் அதே பழைய தயக்கம். சொன்னதும் சிரிப்பாலோ? சரி என்ன நடந்தாலும் கவலையில்லை எப்படி சொல்லிடனும். அவளை முதல்ல பார்த்த நாளுல இருந்து இன்னிக்கி வரைக்கும் எப்படி அவளை உயிருக்கு உயிரா காதல் செயுறேன்னு சொல்லிடனும். இந்த அவஸ்தை இதுக்கு மேல வேணாம்.

தன்னோட பெட்டிய தொறந்து எல்லா வாழ்த்து அட்டையையும் எடுத்து வைத்துக்கொண்டான். மறுபடியும் கண்ணாடி முன்னாடி இன்னும் ஒரு தடவை எல்லாத்தையும் சொல்லி பார்த்துக்கொண்டான். லாவண்யா உன்னை நான் உயிருக்கு உயிரா காதலிக்குறேன், எவ்வளவோ தடவை சொல்லணும் நெனச்சி இருக்கேன் ஆனா... இல்ல நேத்துல இருந்து பயிற்சி பண்ணினது இது இல்லை.

தன்னை தானே கோவமா பார்த்துக்கொண்டான். எவ்வளவு பயிற்சி பண்ணியாச்சி இப்பவே இப்படி உளறின அப்புறம் லாவண்யா முன்னாடி கண்டிப்பா சொல்ல முடியாது. சரி கடைசியா ஒரு முயற்சி - லாவண்யா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நீ தப்பா நெனச்சிக்க கூடாது, ரொம்ப நாலா மனசுக்குள்ள போட்டு பூட்டி வெச்சி இருக்கேன் இனிமேல் முடியாது.

உன்ன பத்து வருசமா காதலிக்குறேன், எத்தனையோ தடவை சொல்லணும் நெனச்சி இருக்கேன் ஆனா தைரியம் வரல. உனக்காக இந்த பத்து வருசமா நான் வாங்கி வெச்சி கொடுக்காத வாழ்த்து அட்டை, கடைசியா வாங்கின கரடி பொம்மை எல்லாத்தையும் கொண்டுவந்து இருக்கேன் - இது கொஞ்சம் சரியா வந்த மாதிரி இருந்தது அவனுக்கு. கண்ணாடியை பார்த்து சிரித்துக்கொண்டான்.

அவனுக்கு பின்னாடி யாரோ நடந்து வரும் சத்தம். இருதயம் வேகமா துடிக்க ஆரம்பிக்கிறது. அது லாவண்யா தான். ஒருதடவை மூச்சி வாங்கி கொண்டான். மெதுவாக திரும்பி லாவன்யாவை பார்த்தான். பத்து வருசத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருந்தாள். லாவண்யா உன்கிட்ட ஒரு ... ஆனந்த் பேச ஆரம்பித்ததும் "அப்பா" என்று ஆசையாக கழுத்தை கட்டி கொண்டால் அவன் செல்ல மகள் சித்ரா.

தான் பார்த்து காதலித்த (யாருக்கும் தெரியாமல்) பெண்ணையே அப்பா அம்மா பார்த்துட்டு வந்து சொன்னதும் ஆனந்துக்கு உலகமே கைக்குள் வந்த சந்தோஷம். லாவன்யாவை பெண் பார்த்த அன்றே அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தான் ஆனால் வார்த்தை வரவில்லை. இன்றோடு பத்து வருஷம் ஓடிவிட்டது.

1 comment:

Bala said...

naa... yennangana neenga...pinniteengana...
namma bharath-ah(actor bharath) vetchi intha scriptla padum yedukalam....