Friday, 13 March 2009

பூ மாலை வாங்கி வந்தார்...

A masterpiece by Jesudas

பூ மாலை வாங்கி வந்தார் பூக்களில்லையே
செவியில்லை இன்னொரு இசையெதற்கு விழியில்லை இன்னொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது

பூ மாலை...

கையில் கிண்ணம் பிடித்துவிட்டான் இனிக்கின்ற விஷத்துக்குள் இறங்கிவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான் ரசிகனின் கடிதத்தைக் கிழித்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான் இருமலைத்தானின்று சுரம்பிடித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான் தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அழ

பூ மாலை..

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான் சபதத்தை அவன் இங்கு உடைத்துவிட்டான்
கடற்கரையெங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவின் ராகம் பாடினான்
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான், போதையினால் புகழ் இழந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அழ

பூ மாலை

No comments: