சில தினங்களுக்கு முன் பாலகுமாரன் எழுதிய "பேய் கரும்பு" புத்தகத்தை படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது (நான் தீவிர பாலகுமாரன் ரசிகனோ, இல்லை இது போன்ற புத்தகம் படிக்கும் பழக்கமோ என்னிடம் கிடையாது). இந்த புத்தகம் என்னை பெரிதும் பாதித்தது.
பட்டினத்தாரின் வாழ்க்கையை சொல்லும் கதையில் நம் வாழ்க்கைக்கு நிறைய பாடங்களையும் சொல்லி கொடுக்கிறது இந்த நூல். முதல் சில பக்கங்களிலேயே பாலகுமாரன் நம்மை கவேரிபூம்பட்டினத்துக்கு கொண்டு சென்று விடுகிறார். கடல் வாணிபத்தையும், அதன் சூட்சமதையும், அதில் உள்ள ஆபத்துகளையும் மிக அழகாய் நம் கண்முன்னே கொண்டுவந்து தருகிறார்.
அந்த கதையின் முதல் பாதியில் பாலகுமாரன் என்ற எழுத்தாளனின் படைப்பு திறன் வெளிபடுகிறது. பாலகுமாரனின் பொதுஅறிவு, எழுதும் விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஞானம் எல்லாம் என்னை பிரமிக்க வைத்தது. கடல் வணிகத்தின் அத்தனை விஷயங்களையும் ஆராய்ந்து மிக அருமையாக கண்முன் கொண்டுவந்து கொடுத்துள்ளார்.
பூம்புகார் நகரத்தின் அழகு, அங்கு வாழ்த்த மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பண்டம் மாற்றும் முறை என்று எல்லாம் என் கண்முன் நடந்தது போன்ற உணர்வை பெற்றேன். இதற்கு முன் சில புத்தகங்களை படித்திருக்கிறேன் ஆனா இந்த அளவுக்கு ஈர்க்கப்படவில்லை.
அந்த கதையில் வரும் மருதவாணர் ஓலை சுவடியில் " காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று எழுதி வைத்து விட்டு சென்றதும் பட்டினத்தார் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பட்டினத்தார் வாழ்க்கையை பற்றி புரிந்துகொள்ளுதலையும் மிக அருமையாய் படைத்தது இருப்பார் பாலகுமாரன்.
என்னை மிகவும் கவர்ந்த இந்த நூல் என்னுள் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நன்றி பாலகுமாரன் அவர்களே.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Paarthi, gud to hear that you are reading books. I would like to suggest you to read sujatha's novels in particular "En iniya iyanthira".
Sure mam. As u say.
Post a Comment