இரண்டு தினங்களுக்கு முன் வார இறுதியில் நேரத்தை கடத்த சிரமப்பட்டு கொண்டு இருந்தேன். அப்பொழுது நண்பருடன் சில விவாதத்தில் ஈடுபட்டேன். அந்த விவாதத்தின் சாரத்தை இங்க தந்துள்ளேன். சில நாட்களுக்கு முன் திடீரென்று ஒரு நண்பர் "Compare " என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் எப்படி கூறலாம் என்று என்னிடம் கேட்டார்.
நானும், இன்னொரு நண்பரும் வெகு நேரம் யோசித்து "ஒப்பிடு" என்று கூறலாம் என்று சொன்னோம். இந்த நிகழ்ச்சி எங்கள் அனைவரையும் யோசிக்க வைத்தது. நாம் அனைவரும் எந்த அளவுக்கு தமிழ் மொழியில் இருந்து விலகி நிற்கின்றோம் என்று எண்ணி பார்க்க வேண்டும். தகவல் தொழிநுட்பம் வளர்ந்த இந்த யுகத்தில் கண்டிப்பாக தமிழ் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளுக்கு ஏன் மற்ற ஊருக்கு கூட போய் பிழைக்க முடியாது. ஆனால் அதையே காரணம் காட்டி தமிழை சாகடித்து கொண்டு இருக்கின்றோம்.
தமிழ் நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களில் நூற்றுக்கு எண்பது பேர் பள்ளி படிப்புக்கு பின் தமிழை எழுதுவது கிடையாது. கல்லூரி படிப்புகளில் கூட தமிழ் கிடையாது. மின்னஞ்சல் வந்ததில் இருந்து யாரும் கடிதம் எழுதுவது கிடையாது. தமிழ் எழுதுவது பள்ளி படிப்பு முடிந்ததும் நின்று விடுகிறது. பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தமிழில் பேசுவதை விரும்புவது இல்லை. அம்மா, அப்பா என்று அழைப்பதை விட "டாடி", "மம்மி" என்று அழைக்கவே ஆசைப்படுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க கூட விடுவதில்லை. பிற நாட்டின் மொழியை கற்று கொள்ளவே விரும்புகிறார்கள்.
அரசியல்வாதிகள் போல தமிழை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும், வேற மொழியே கற்றுக்கொள்ள கூடாது என்று நான் சொல்லவில்லை. எல்லா மொழியும் கற்று கொள்ள வேண்டும் ஆனால் அதற்கு முன்னர் தாய் மொழியை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. இன்று இருபத்தி ஐந்து வயதில் இருந்து முப்பத்தி ஐந்து வயதுக்குள் இருக்கும் எத்துனை பேருக்கு தமிழை தவறின்றி எழுத தெரியும்? ஒரு பக்கம் முழுவதும் தமிழில் தவறின்றி எழுத எத்துனை பேரால் முடியும்?
இந்த நிலை நீடித்தால் மிக விரைவில் தமிழ் என்ற மொழி எழுத்து வடிவத்தில் இருந்து மறைந்துவிடும். இன்னும் ஐம்பது வருடத்தில் தமிழ் எழுத்து வழக்கிலிருந்த அழிந்து விடும். நாம் அனைவரும் கிடைக்கும் சந்தர்பத்தில் கண்டிப்பாக தமிழில் எழுத, பேச வேண்டும். இந்த மொழியை அழியாமல் பாதுகாப்பது நம் கையில் உள்ளது. கட்டாயமாக ஒரு தமிழனிடம் பேசும் போது தமிழில் பேசுங்கள், தமிழில் எழுதுங்கள். இந்த முயற்சி கூட நாம் எடுக்கவில்லை என்றால் தமிழ் இனி விரைவில் சாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
Correct all your spelling mistakes first. And either use a formal tamil or a colloquial tamil. You have mixed both in this post. And such usage kills the language anyways. Sooner or later.
தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி.
kalakira arun..gud nannum ithai than sollanumnu ninaichen..gud
correct arun nannum ithan sollanumnu ninaichen
அருண் சொல்லும் பொழுது சில தவறுகள் இருந்தது. அதை எல்லாம் திருத்திவிட்டேன்.
Kalakkitta baa kaapi!! sappa matter dhaan thamizh!! Appaaliga vootaanda varein.....
And this is how your tamil should be ;)
Post a Comment