Tuesday 19 August 2008

கடவுளுக்கு ஒரு கடிதம் ...

இந்த கடிதம் கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சி இல்லை. கடவுள் இருக்கார் அல்லது நம்மை விட பெரிய சக்தி ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களில் ஒருவன் நான். என் மீது சிறு வயதில் இருந்து திணிக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எழுந்த, எழும் கேள்விகளை இங்கே கேட்கின்றேன்.

கடவுள் விடை அளிப்பாரா?

  • இந்த உலகில் என் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?
  • ஏழைகள், அனாதைகள், உடல் ஊனமுற்றவர்கள் செய்த பாவம் என்ன?
  • போன ஜென்மத்தில் செய்த பாவத்தினால் இந்த ஜென்மத்தில் இப்படி அவதிபடுகிறார்கள் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செய்த பாவம் என்ன என்று தெரியாமல் தண்டனை அனுபவிப்பது நியாயமா?
  • தவறு செய்யும் மக்கள் சுகபோகத்துடன் வாழ்வதும், நேர்மையாய் இருப்பவர்கள் அவதிபடுவதும் எந்த விதத்தில் தர்மம்?
  • தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு அப்பாவி மக்கள் பலியாவது யார் செய்த பாவம்?
  • சில ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் தீயில் கருகி இருந்த குழந்தைகள் செய்த குற்றம் என்ன? அவர்களுக்கு என் இந்த தண்டனை?
  • சுனாமியில் இறந்து போனவர்கள் எல்லாரும் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா?

இது போல பல கேள்விகள் என் போன்ற கோடிக்கணக்கான மக்களின் மனதில் இருக்கும். எல்லாம் விதிப்படி நடக்கும் என்றால் அந்த விதியை ஏன் இப்படி எழுத வேண்டும்?

குரங்கில் இருந்து பிறந்த மனிதன் பாவம் செய்தது விதியின் பயனால் தானே? அப்படியானால் மனிதனை பாவம் செய்ய சொன்னது யார் குற்றம்?

கடவுள் இதற்கு விடை அளிப்பாரா?

2 comments:

Arun Sundar said...

Kadavul is just a belief. And thats more like a blind belief. More you question, lesser would be your trust.

So, Romba yosikkaadha. Remember "This too shall pass!"

Bala said...

Vijai,
Yenakku marujenmam nambikkai yellam kidayathu....pona jenmathula senja paavumna..appo first jenmathula yentha paavamum seiyama yaen oruthan kashta padraan?
As you told there is one such power which created the basic system...

When I think about the incidents that you have specified, the questions that come in to my mind are,
is there a power still or will it come back or has it become obsolete?

But anyways as we dont have an evidence of current existence of the super power nor do we have the concrete reasons for denying its existence... we have to go with our intution..