சின்ன வயசுல (இப்ப எனக்கு ரொம்ப வயசு ஆயிடல) அதாவுது கொசுவத்தி சுருல ஒரு பதினஞ்சி வருஷம் பின்னால சுத்தினா அப்ப நான் அஞ்சவுது படிச்சிட்டு இருந்தேன். நியூட்டன் ஆப்பிள் விழுறதா பார்த்து எதையோ கண்டுபிடிச்ச மாதிரி நானும் ஒரு நாள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தப்ப ஒரு ஐடியா தோணிச்சி. நாம என் ஹிந்தி படிக்க கூடாதுன்னு. உடனே எங்க அப்பா அம்மா கிட்ட இந்த விஷயத்த சொல்ல அவங்களுக்கு ரொம்ப சந்தோசம். ஹிந்தி படிச்சா டெல்லி ல கூட போய் வேலை செய்யலாம், அப்புறம் வெளிநாடுகலாம் கூட போலாம் (இது பக்கத்துக்கு வீட்டு ஆன்டி போட்ட பிட்டு). நான் கூட ஹிந்தி கத்துகிட்டா வெளிநாடுலாம் போகலாம் போலன்னு நம்பிட்டேன்.
தான் கெட்ட குரங்கு வானத்தையும் சேர்த்து கெடுத்ததாம் கதையா எங்க அண்ணா, சித்தி பையன் எல்லாரும் சேர்ந்து ஹிந்தி கத்துக்க முடிவு பண்ணினோம். பக்கத்து நகர் ல ஒரு ஐயர் மாமி ஹிந்தி சொல்லி தருவது தெரிஞ்சி அங்க எங்களை சேர்த்து விட்டாங்க. வழக்கம் போல அ ஆ ல ஆரம்பிச்சி ஒரு மாசத்துல வார்த்தைக்கு வந்தாச்சி, அதோட எங்க ஹிந்தி ஆர்வமும் சூன்யம் ஆயிடிச்சி. ஹிந்தி ல பூ, மற்றும் வேற சில வார்த்தைகளை கேட்டா சென்னை தமிழ் ல பேசுற கெட்ட வார்த்தை மாதிரி இருக்கும். அப்ப அதுக்கு அர்த்தம் தெரியாது ஆனா சில பசங்க பேசி கேட்டு இருக்கோம். இந்த வயசான மாமி ரொம்ப பொறுமையா எங்களுக்கு ஹிந்தி வார்த்தைகள் சொல்லி தர, நான் என் சித்தி பையன் கிட்ட என்னடா இந்த ஐயூர் மாமி கெட்ட வார்தைலாம் பேசுறாங்கனு ஆரம்பிச்சேன்.
அதுவரைக்கும் இதை எல்லாம் கண்டுக்காம ஹிந்தி படிச்சிட்டு இருந்த பசங்க எல்லாம் நம்ம அவுட் ஒப் பாக்ஸ் திங்கிங் பார்த்துட்டு அதே மாதிரி அவங்களும் கவனிக்க ஆரம்பிச்சாங்க. இந்த மாதிரி கொடூரமா யோசிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ஹிந்தி போய் வெறும் தமிழ் கெட்ட வாரத்தைகள் தான் கவனிக்க ஆரம்பிச்சோம். ஹிந்தி டியூஷன் வந்தாலே ஒரு சிரிப்பும் கும்மாளமுமா இருப்போம். பாவம் அந்த மாமி இந்த விஷயம் தெரியாம ரொம்ப அக்கறையோடு சொல்லி கொடுத்துட்டு இருப்பாங்க.
இந்த மாதிரி விளையாட்டு தனமா ஒரு மாதிரி "ப்ராத்மிக்" னு சொல்லுற முதல் பரிட்சைய எல்லாரும் வெற்றிகரமா முடிச்சோம். நம்ம ஹிந்தி ஆர்வம் தான் சிரிப்பா சிரிகுதேனு இதோட நிறுத்திடலாம்னு நெனச்சா வீட்டுல இருக்குறவங்க விடுறதா இல்ல. சரி வெற்றி வேல்! வீர வேல்! னு சொல்லிகிட்டே "மத்தியமா " னு சொல்லுற ரெண்டாவுது பரிட்சைக்கு டியூஷன் போக ஆரம்பிச்சோம்.
"மத்தியமா " எனக்கு பெரிய சவாலா தான் இருந்துச்சி (நாம படிச்சா தானே!) எந்த வார்த்தை கேட்ட வார்த்தை மாதிரி இருக்குனு ஆராய்ச்சி பண்ணிடே இருந்ததால அந்த மாமி சொல்லி தந்தது எதுவுமே மனசுல பதியல. எல்லாரையும் கிண்டல் பண்ணிட்டு, சிரிசிட்டே மூணு மாசம் டியூஷன் ஓடிடிச்சி. பரிட்சைக்கும் தைரியமா (அப்பா காசு தானே) காசும் கட்டி, பரிட்சையும் எழுதியாச்சி. எழுதியதும் நமக்கு முடிவு தெரிஞ்சிடிச்சி இருந்தாலும் யார்கிட்டயும் சொல்லல. எதிர் பார்த்த மாதிரியே என்ன்ன தவிர அந்த டியூஷன் ல படிச்சா எல்லாரும் பாஸ்.
சரி இதோட விட்டுடுவாங்க நாம தப்பிச்சிட்டோம் னு நெனச்சா "முயற்சி திருவினை ஆக்கும்" னு சொல்லி மறுபடியும் "மத்தியமா " பரிட்சைக்கு டியூஷன் சேர்த்து விட்டாங்க. மறுபடியும் அந்த முறையும் பரீட்சை எழுதி பாஸ்க்கு ரெண்டு மார்க் கம்மிய வாங்கினேன் (ஆமாங்க பாஸ் ஆகல, அத தான் கொஞ்சம் அழகா சொன்னேன்). இந்த முறை எனக்கே கொஞ்சம் அசிங்கம தான் இருந்துச்சி. மூணாவுது முறைய டியூஷன் போகாம, நண்பர்கள் (நண்பர்களா அவனுங்க, என்னா நக்கல் பண்றானுங்க ஒரு சாதாரண ஹிந்தி பரிட்சைல பாஸ் ஆகலன்னு) கிட்ட சொல்லாம, வெறும் பரிட்சைக்கு மட்டும் காசு கட்டி எழுதி பாஸ் ஆயிட்டேன். சத்தியமா நான் "மத்தியமா " பாஸ் ஆயிட்டேன்.
அதுக்கு அப்புறம் ஹிந்தி டியூஷன் எடுக்குற தெரு பக்கம் கூட போகறது இல்லனு சத்தியம் பண்ணிட்டேன். எவனால ஒரு ஒரு பரிட்சைக்கும் மூணு, நாலு தடவ பரீட்சை எழுத முடியும்? நம்ம கூட சேர்ந்த சின்ன சின்ன பசங்கலாம் ஒரே முயற்சில பாஸ் பண்ணிட்டு போகும் போது நாம மட்டும் ஒரு எடத்துல இருந்த நல்லவ இருக்கு? அதுனால அன்னிக்கி இருந்து மலையாளம் கத்துகலாம் னு முடிவு பண்ணிட்டேன். ஆனா மலையாளம் மட்டும் கொஞ்சம் வித்யாசமா கத்துகலாம்னு மலையாள படங்களா பார்க்க ஆரம்பிச்சேன்!!!
மலையாளம் ..... (தொடரும்) போடலாம்னு நெனச்சேன் ஆனா மலையாள படத்துல வசனங்கள் கம்மி, ஆக்க்ஷன் தான் அதிகம் அதுனால மலையாளம் காத்துக முடியல!!!
Tuesday, 22 June 2010
Wednesday, 2 June 2010
என்னய்யா கூத்து இது?
ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் ஒருவர் மூலமாக ஒரு பிரபலமான எழுத்தாளர் (?) அறிமுகம் ஆனார். அறிமுகம்னா நேரடியாக இல்லை, அவருடைய வலைபதிவுகளின் அறிமுகம் கிடைத்தது. அன்றையில் இருந்து தினமும் அவருடைய வலைபதிவுகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அந்த எழுத்தாளர் எழுதுவது 90 % கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது ஆனாலும் சில பதிவுகள் சிறப்பாக இருக்கும் மேலும் சில காமெடி விசயங்களும் இருக்கும் ஆதலால் தொடர்ந்து படித்து வருகின்றேன்.
கொஞ்ச நாளைக்கி முன்னாடி நம்ம நித்யனந்தாவை பற்றி ஆகா ஓஹோன்னு எழுதிட்டு இருந்தார் நம்ம பிரபலமான எழுத்தாளர் (?). அவர் தான் கடவுள், எனக்கு ரெண்டு எடத்துல ஒரே நேரத்துல காட்சி தந்தார் அது இதுன்னு நெறைய எழுதினர். என்னிக்கி டிவில சாமியாரோட காம களியாட்டம் வெளிஆனதோ அன்னிக்கே நம்ம பிரபலமான எழுத்தாளர் (?) தனது வலைபதிவுல அந்தர் பல்டி அடிச்சிட்டார். எனக்கு தெரியும் இந்த சாமியார் ஒரு திருடன்னு, அவர் எழுதின நூல்களை மொழிபெயர்த்ததுக்கு எனக்கு இன்னும் காசு தரவில்லை அது இதுன்னு நிறைய எழுதினர்.
சரி இதுலாம் சகஜம், கீழ விழுந்தாலும் மண் ஒட்டலன்னு சொல்லுறது எல்லாரும் செய்யுறது தான்னு நானும் எடுத்துகிட்டேன். நேத்து இரவு விஜய் டிவில "நீயா நானா" நிகழ்ச்சில நம்ம பிரபலமான எழுத்தாளர் (?) கலந்துகிட்டார் (ஏற்கனவே அந்த டிவி நிகழ்ச்சில கலந்துகிட்டு பேசினது காசு தரவில்லைன்னு நிறைய பொலம்பி இருக்கார் நம்ம பிரபலமான எழுத்தாளர், இருந்தாலும் ஏன் மறுபடியும் கலந்துகிடார்னு தெரியல)
நிகழ்ச்சில இவர பார்த்து நீங்க சாமியார நம்பி உங்க வலைபதிவுல நிறைய எழுதுனீங்க, அப்புறம் நீங்களே சாமியார் சரியானவர் இல்லன்னு எழுதுனீங்க ஆனா உங்க எழுதுகள படிக்குற கூட்டம் நீங்க எழுதுனத நம்பி சாமியார் கிட்ட ஏமாந்து இருப்பாங்க, எப்ப நீங்க சாமியார மறுத்தாலும் அவங்க நம்பிக்கை மாறாது அதுனால உங்க வாசகர்கள் கிட்ட நீங்க மன்னிப்பு கேட்பீங்களானு கேட்டாங்க.
நம்ம எழுத்தாளரும் என்ன என்னவோ சமாளிச்சி பார்த்தாரு அப்புறம் கடைசியா ஆமாம் நான் அவர்களை தவற வழிநடதிடேன், மன்னிப்பு கேக்குறேன்னு சொல்லிட்டார். இது நடந்தது போன ஞாயிற்று கிழமை. நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆனது தான் ஞாயிற்று கிழமை ஆனா படம் பிடிச்சது எப்பனு தெரியல. அவரே அவர் வலைபதிவுல பெருமையா இன்று விஜய் டிவில அடியேன் பேசுறேன் பாருங்கன்னு போட்டு இருந்தார்.
ஒரு ரெண்டு நாளைக்கி அப்புறம் என்னை அந்த நிகழ்ச்சில ரொம்ப சாதுர்யம பேசி மன்னிப்பு கேள்னு சொல்லி மடகிடாங்க. நான் ரொம்ப அப்பாவி, எனக்கு இந்த மாதிரி திடீர் தாக்குதலை சமாளிக்க தெரியல. அவங்க செஞ்சது பெரிய தப்பு, நான் ஏன் மன்னிப்பு கேக்கணும் அது இதுன்னு எப்பவும் போல அவர் பாணியல உளறிட்டு இருக்கார். அவரே மூச்சிக்கு முன்னூறு தடம் சொல்லுற ஒரு விஷயம் என்னனா அவர் 35 வருசமா எழுத்து உலகத்துல இருக்குறேன் னு. அந்த மாதிரி இருக்குற ஒருத்தர், உலகத்துல இருக்குற எல்லா விசயத்த பத்தியும் கருத்து சொல்லுற ஒருத்தர், இளையராஜா முதல் A R ரஹ்மான் வரைக்கும் அமைகின்ற இசை குப்பை, இவர்களுக்கு உலக இசை பத்தி புரிதல் இல்லன்னு பேசுற ஒருத்தர், நிகழ்ச்சில கேள்வி கேட்கும் போதே "நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்?" னு தைரியமா கேட்க வேண்டியது தானே?
சின்ன பசங்க மாதிரி மன்னிப்பு கேட்டு அப்புறம் வந்து ரெண்டு நாள் யோசிச்சி வலைபதிவுல எதிர்ப்பை காட்டுவானேன்? என்னய்யா கூத்து இது?
வடிவேலு சொல்லுற மாதிரி "உங்களலாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு"

Subscribe to:
Posts (Atom)