ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் ஒருவர் மூலமாக ஒரு பிரபலமான எழுத்தாளர் (?) அறிமுகம் ஆனார். அறிமுகம்னா நேரடியாக இல்லை, அவருடைய வலைபதிவுகளின் அறிமுகம் கிடைத்தது. அன்றையில் இருந்து தினமும் அவருடைய வலைபதிவுகளை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அந்த எழுத்தாளர் எழுதுவது 90 % கருத்துகளில் எனக்கு உடன்பாடு கிடையாது ஆனாலும் சில பதிவுகள் சிறப்பாக இருக்கும் மேலும் சில காமெடி விசயங்களும் இருக்கும் ஆதலால் தொடர்ந்து படித்து வருகின்றேன்.
கொஞ்ச நாளைக்கி முன்னாடி நம்ம நித்யனந்தாவை பற்றி ஆகா ஓஹோன்னு எழுதிட்டு இருந்தார் நம்ம பிரபலமான எழுத்தாளர் (?). அவர் தான் கடவுள், எனக்கு ரெண்டு எடத்துல ஒரே நேரத்துல காட்சி தந்தார் அது இதுன்னு நெறைய எழுதினர். என்னிக்கி டிவில சாமியாரோட காம களியாட்டம் வெளிஆனதோ அன்னிக்கே நம்ம பிரபலமான எழுத்தாளர் (?) தனது வலைபதிவுல அந்தர் பல்டி அடிச்சிட்டார். எனக்கு தெரியும் இந்த சாமியார் ஒரு திருடன்னு, அவர் எழுதின நூல்களை மொழிபெயர்த்ததுக்கு எனக்கு இன்னும் காசு தரவில்லை அது இதுன்னு நிறைய எழுதினர்.
சரி இதுலாம் சகஜம், கீழ விழுந்தாலும் மண் ஒட்டலன்னு சொல்லுறது எல்லாரும் செய்யுறது தான்னு நானும் எடுத்துகிட்டேன். நேத்து இரவு விஜய் டிவில "நீயா நானா" நிகழ்ச்சில நம்ம பிரபலமான எழுத்தாளர் (?) கலந்துகிட்டார் (ஏற்கனவே அந்த டிவி நிகழ்ச்சில கலந்துகிட்டு பேசினது காசு தரவில்லைன்னு நிறைய பொலம்பி இருக்கார் நம்ம பிரபலமான எழுத்தாளர், இருந்தாலும் ஏன் மறுபடியும் கலந்துகிடார்னு தெரியல)
நிகழ்ச்சில இவர பார்த்து நீங்க சாமியார நம்பி உங்க வலைபதிவுல நிறைய எழுதுனீங்க, அப்புறம் நீங்களே சாமியார் சரியானவர் இல்லன்னு எழுதுனீங்க ஆனா உங்க எழுதுகள படிக்குற கூட்டம் நீங்க எழுதுனத நம்பி சாமியார் கிட்ட ஏமாந்து இருப்பாங்க, எப்ப நீங்க சாமியார மறுத்தாலும் அவங்க நம்பிக்கை மாறாது அதுனால உங்க வாசகர்கள் கிட்ட நீங்க மன்னிப்பு கேட்பீங்களானு கேட்டாங்க.
நம்ம எழுத்தாளரும் என்ன என்னவோ சமாளிச்சி பார்த்தாரு அப்புறம் கடைசியா ஆமாம் நான் அவர்களை தவற வழிநடதிடேன், மன்னிப்பு கேக்குறேன்னு சொல்லிட்டார். இது நடந்தது போன ஞாயிற்று கிழமை. நிகழ்ச்சி ஒலிபரப்பு ஆனது தான் ஞாயிற்று கிழமை ஆனா படம் பிடிச்சது எப்பனு தெரியல. அவரே அவர் வலைபதிவுல பெருமையா இன்று விஜய் டிவில அடியேன் பேசுறேன் பாருங்கன்னு போட்டு இருந்தார்.
ஒரு ரெண்டு நாளைக்கி அப்புறம் என்னை அந்த நிகழ்ச்சில ரொம்ப சாதுர்யம பேசி மன்னிப்பு கேள்னு சொல்லி மடகிடாங்க. நான் ரொம்ப அப்பாவி, எனக்கு இந்த மாதிரி திடீர் தாக்குதலை சமாளிக்க தெரியல. அவங்க செஞ்சது பெரிய தப்பு, நான் ஏன் மன்னிப்பு கேக்கணும் அது இதுன்னு எப்பவும் போல அவர் பாணியல உளறிட்டு இருக்கார். அவரே மூச்சிக்கு முன்னூறு தடம் சொல்லுற ஒரு விஷயம் என்னனா அவர் 35 வருசமா எழுத்து உலகத்துல இருக்குறேன் னு. அந்த மாதிரி இருக்குற ஒருத்தர், உலகத்துல இருக்குற எல்லா விசயத்த பத்தியும் கருத்து சொல்லுற ஒருத்தர், இளையராஜா முதல் A R ரஹ்மான் வரைக்கும் அமைகின்ற இசை குப்பை, இவர்களுக்கு உலக இசை பத்தி புரிதல் இல்லன்னு பேசுற ஒருத்தர், நிகழ்ச்சில கேள்வி கேட்கும் போதே "நான் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்?" னு தைரியமா கேட்க வேண்டியது தானே?
சின்ன பசங்க மாதிரி மன்னிப்பு கேட்டு அப்புறம் வந்து ரெண்டு நாள் யோசிச்சி வலைபதிவுல எதிர்ப்பை காட்டுவானேன்? என்னய்யா கூத்து இது?
வடிவேலு சொல்லுற மாதிரி "உங்களலாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment