Wednesday 19 May 2010

சலூன்...

சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு ஒரு நல்ல அனுபவம், மனநிறைவு தராத ஒரே விஷயம் இந்த முடிதிருத்தகம் தான். நானும் எவ்வளவோ கடைகள் மாத்தி பாத்துட்டேன் ஆனா ஒரு தடவை கூட நான் நெனச்ச மாதிரி யாருமே எனக்கு முடி திருத்தம் செஞ்சது இல்ல. பத்து வயசு இருக்கும் போது ஆசைய போய் இப்படி வெட்டு அப்படி வெட்டுன்னு நிறைய சொல்லிட்டு உட்காருவேன், கடைசியா பார்த்தா சதுரவட்டைனு சொல்லுவாங்களே அந்த மாதிரி வெட்டி வெச்சிருப்பான். ரொம்ப கோவமா கடைய விட்டு வெளிய வந்த எங்க அப்பா ஸ்டைல் ல நின்னுட்டு இருப்பார். அப்ப தான் தெரியும் இவரு சொல்லி தான் இப்படி வெட்டி விட்டு இருக்கான்னு.

நானும் கடைய மாத்தி பார்த்தேன் ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகல. கொஞ்சம் வயசு ஆனதுக்கு அப்புறம் பைக் எடுத்துகிட்டு தூரமா இருக்குற கடைக்கு போவேன் (அப்பா தொந்தரவு இருக்க கூடாதுன்னு) ஆனா அங்கயும் ஏதோ ஒரு குறை இருக்கும். மனசுக்கு முழு திருப்த்தி கிடைகல. இப்படியே இவ்வளவு காலம் ஓடி போச்சி. ரெண்டு நாளைக்கு முன்னாடி இங்க ஜெர்மனி ல முடி வெட்ட போனேன். நமக்கு தான் இந்தியாலேயே சரியா வெட்ட மாடேனுன்களே இங்க என்னத்த வெட்ட போறானுங்கனு நெனசிடே தான் போனேன்.

எனக்கு முன்னாடி ஒரு கருப்பனுக்கு முடி வெட்டுறேன்னு மொட்டை அடிச்சிட்டு இருந்தானுங்க. அவன முடிச்சிட்டு என் கிட்ட வந்தான். இந்த கொடுமைல பாஷை வேற ஒரு பிரச்சனை. அவனுக்கு இங்கிலீஷ் ல எப்படி வெட்டனும்னு சொல்ல ஆரம்பிச்சவுடனே "எனக்கு தெரியும், இதே ஸ்டைல் ல கொஞ்சம் கம்மி பண்ணனும் சரியானு?" கேட்டான். எனக்கு ரொம்ப ஆச்சர்யமா போய்டிச்சி அடடா இவன போய் தப்ப நெனசிடோமேனு மனசுக்குள்ள வருத்தப்பட்டேன். ரொம்ப சந்தோசமா ஆமாம்னு தலைய ஆட்டினேன். கத்திரி இல்லாம ஒரு பதினஞ்சி நிமிஷம் என் தலைல விளையாடினான். சும்மா சொல்ல கூடாது கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுவானே "அண்ணன் சிற்பி மாதிரி, எப்படி செதுகுறேன் பார்த்தியான்னு" அந்த மாதிரி என் தலையை செதுக்கினான்.

பதினஞ்சி நிமிஷம் கழிச்சி கண்ணாடில பார்த்தேன். பார்த்ததும் சிரிப்ப அடக்க முடியல என்னால. பத்து வயசுல அடிச்ச அதே சதுரவட்டை!! நான் சிரிப்பதை பார்த்துட்டு "சந்தோஷமான்னு" கேட்டான். வேற என்ன சொல்லுறது "ரொம்ப சந்தோசம்" னு சொல்லிட்டு பத்து ஐரோ கொடுத்துட்டு வீட்டுக்கு வந்தேன்.

பார்பர் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!!!!

1 comment:

Bala said...

machi.. apdiyae nee kooda utkarnthu pesra maathri karpana pannaen...
I got to remember about our NCC days..
Nalla enjoy pannaen da intha post-ah padichitu