வேலை நிமித்தமாக ஜெர்மனி வந்து இருக்கேன். ஏற்கனவே போன வருஷம் ரெண்டு தடவ வந்த ஊருதான். ஒரு சின்ன வித்யாசம் என்னனா இந்த தடவ "work permit" ல வந்து இருக்கேன். சரி அதுக்கு என்ன இப்போனு நீங்க கேக்குறது புரியுது. எப்பவுமே "long term" ல ஒரு நாட்டுக்கு வரும் பொது சில விஷயங்கள் புதுசா இருக்கும் அந்த மாதிரி இங்க ஜெர்மனி ல நான் சந்தித்த விசயங்களை சொல்ல தான் இந்த பதிவு.
இந்த பயணம் ஆரம்பத்துல இருந்தே கொஞ்சம் இல்ல நிறையவே இடையூறுகள் தந்தது. நான் கிளம்பின வாரம் இங்க ஜெர்மனி ல ஏதோ பொருட்காட்சினு விமான டிக்கெட் கிடைகல. கடைசி நேரத்துல ஒரு விமானத்துல டிக்கெட் கிடைச்சிது ஆனா இருபது கிலோ தான் அனுமதி. ரொம்ப நாள் அங்க போறதால என் கிட்ட இரண்டு பொட்டி இருந்தது. ஒரு வழிய அதிக கட்டனும் செலுத்தி எல்லா சாமான்களையும் இங்க கொண்டு வந்தேன். எல்லா கம்பெனி போல எங்க கம்பெனியும் முதல் இரண்டு வாரத்துக்கு தான் ஹோட்டல் ரூம் தருவாங்க அதுக்குள்ள நாம வீடு பாத்துக்கணும்.
வந்து சேர்ந்த நாள்ல இருந்து வீடு தேட ஆரம்பிச்சேன். ஒரு பெரிய கொடுமை என்னனா இங்க எல்லாமே இவங்க மொழில தான் இருக்கும். ஒரு பக்கம் கூகிள் வெச்சிகிட்டு எல்லா வாடகை விளம்பரத்தையும் மொழி மாற்றம் செய்து வீடு தேடினேன். ஜெர்மனில வீடு தேடி தரும் ஏஜெண்ட்ஸ் மூணு மாச வாடகைய கட்டணமா கேக்குறாங்க, சிலர் இரண்டு மாத வாடகையை கட்டணமா கேக்குறாங்க. ஒரு வாரம் தினமும் நாலு மணிநேரம் இந்த தேடுதல் வேட்டை நடந்தது ஆனாலும் ஒரு முன்னேறமும் இல்ல. ஒரு வழியா ஒரு இந்தியன் மூலமா இந்தியர்கள் இருக்குற ஒரு பிளட்ஸ்ல வீடும் கிடைத்தது.
ஒரு பெரிய நிம்மதி, சரி அடுத்தது என்னனு பாக்கலாம்னு பார்த்த பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும். அது ரொம்ப சுலபம், ஒரு பத்து நிமிஷ வேலை தான். அப்புறம் இங்க இருக்குற அலுவலகத்துல நீங்க ஜெர்மனில வந்த நாள், தங்குகிற இடம், உங்கள் சம்பளம் எல்லாத்தையும் பதியனும். உங்களுக்கு முதல மூணு மாசத்துக்கு தான் விசா தருவாங்க இந்தியால. இங்க வந்து நீங்க உங்க விவரத்தை தந்ததும் ஒரு இரண்டு வாரம் கழித்து உங்களுக்கு விசா மாற்றி தருவாங்க. இது ஒரு தேவை இல்லாத ஆணி ஆனாலும் வேற வழி இல்ல நீங்க இத செய்து தான் ஆகவேண்டும். இங்க பதிவது, விசா மாற்றி தருவது எல்லாம் சுலபமான காரியம் தான் ஆனாலும் நீங்க ரெண்டு தடவை நேரில் போகவேண்டும்.
இங்க மேல சொன்ன எல்லா விசயமும் எல்லா நாட்டிலையும் இருக்கு ஆனா ஜெர்மனி இருக்குற பெரிய பிரச்சனை மொழி. மொழி தெரியாம முதல் ரெண்டு வாரம் கொஞ்சம் தலைவலி தான். எல்லாம் முடிந்ததும் வாழ்க்கை கொஞ்சம் சுலபம். பொதுவாவே இங்க இருக்குற ஆட்கள் கொஞ்சம் இல்ல நிறையவே சோம்பேறிகள் தான். ச்சே சோம்பேறிகள் கிடையாது ஆனால் ரொம்பவே ஆமை வேகத்துல தான் வேலை செய்வார்கள். பொறுமை போய்டும் நமக்கு ஆனா ஒரு வருஷம் இங்க இருந்த நெறைய பொறுமை வந்துடும்.
இப்போ இருக்குற மிக பெரிய தலைவலி என்னனா என் மனைவியின் விசா தான். ஜெர்மனி போக நினைக்கும் திருமணம் ஆனா எல்லாருக்கும் நான் சொல்லுறது என்னனா உங்க மனைவியை கூட கூட்டிட்டு போக நெனசீங்கனா கண்டிப்பா மூணு மாசத்துக்கு முன்னாடி விசா விண்ணப்பம் செய்யுங்க. மனைவி மற்றும் குழந்தைக்கு விசா வரதுக்கு கண்டிப்பா மூணு மாசம் ஆகும். நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலியா இருந்த சீக்கிரம் வரும். தேவை இல்லாத நிறைய தலைவலி இருக்கு இந்த விசா ல. சில சமயம் உங்கள் திருமணத்தை விசாரிக்கணும்னு சொல்லுவாங்க. அப்படி நடந்தால் இன்னும் ஒரு இரண்டு மாதம் ஆகும் விசா வரதுக்கு. யாரவுது மனைவியை கூடவே கூட்டிட்டு போகணும்னு நினைச்ச, நீங்க கண்டிப்பா மூணு மாசத்துக்கு முன்னாடி விசா விண்ணப்பம் அனுப்புங்க இல்லனா என் கதி தான்.
இங்க இருக்குற போற நாட்கள் ல ஜெர்மனி பத்தி எனக்கு தெரிஞ்சத எழுதுறேன். உங்களுக்கு உதவியா இருக்கும் என்ற நம்பிக்கையோடு.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Aiyo paavam!!!!
Post a Comment