Wednesday 19 May 2010

சாம்பார்...

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சாப்பாடுக்கு சிங்கி அடிச்சப்ப வேற வழி இல்லாம சுய சமையல் தான் உசுர காப்பாத்திக்க ஒரே வழின்னு டெய்லி அம்மாவோட ஆன்லைன் சப்போர்ட்ல சமைக்க ஆரம்பிச்சேன்.

சென்னைல இருந்த வரைக்கும் ராஜா மாதிரி தட்ட கூட கழுவினது இல்ல. எல்லாமே டேபிள்கு வந்துடும் எப்ப என்னடானா நிலைமை தல கீழா மாறிடிச்சி. இதுல உப்பு இல்ல, அதுல பெருங்காயம் ஜாஸ்தின்னு அதிகாரம் பண்ணினது எல்லாம் பிளாஷ் பாக் வந்து போச்சி. இதுக்குலாம் அசர கூடாதுன்னு கைல கரண்டிய எடுத்தேன்.

சின்ன பேப்பர் ல பிட் எழுதி வெச்சிகிட்டேன். ஒரு ரெண்டு நாளைக்கி சாம்பார் மாதிரி வந்தது அப்புறம் சாம்பாரே வந்தது. ஒரு பத்து தடவ செஞ்சதும் மனப்பாடம ஆயிடிச்சி. வேலைல இருந்து வந்ததும் டக்கு டக்குனு ஒரு அரை மணி நேரத்துல சாம்பார் வெச்சி சாதம் வெச்சிடுவேன். சில சமயத்துல எனக்கு ரொம்பவும் பிடிச்ச முள்ளங்கி சாம்பார் அற்புதமா வந்திருக்கும் அப்ப எனக்கு நானே சுத்தி போட்டுப்பேன். எப்படி நல்லா போயிட்டு இருந்த டைம் ல தான் சென்னை போகவேண்டிய கட்டாயம் வந்தது. சென்னை போனதுக்கு அப்புறம் சமையல் கட்டு பக்கம் தல கூட வெச்சி படுக்கல.

இப்ப ரெண்டு வருஷம் கழிச்சி மறுபடியும் சுய சமையல். ஜெர்மனி வந்து ஒரு மூணு வாரம் ரெடிமேடு ரசம், பருப்பு பொடி, ஊறுகாய், முட்டை பொரியல்னு ஓடிட்டேன். இதுக்கு மேல எப்படியே போச்சினா ரொம்ப சீக்கிரம் நாக்க ஜெர்மனி சுடுகாட்டுல புதைக்க வேண்டியதுதான். அதுக்குள்ள எதாவுது செயலாம்னு நேத்து களத்துல எறங்கினேன். பக்கத்துல இருக்குற ஒரு கடைல போய் துவரம் பருப்பு, புளி, கடுகு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, சமையல் எண்ணெய், மிளகாய் பொடி எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.

முருங்கைக்காய் சாம்பார் செயலாம்னு முடிவு செஞ்சி அதுக்கு தேவையானதையும் வாங்கிட்டு வந்து ஒரு வழிய செஞ்சி முடிச்சேன் (அம்மா கிட்ட ஆன்லைன் சப்போர்ட் கேட்டு தான்). சும்மா சொல்ல கூடாது சாம்பார் பிரமாதம வந்துச்சி. உப்பு, கரம் எல்லாம் சரியாய் இருந்ததாலே ஒரு பிடி சாதம் அதிகமாவே சாப்டேன். ஒரு மாசத்துக்கு அப்புறம் ரசிச்சி சாபிட்டேன்னு சொல்லலாம். இந்த கூத்து இன்னும் கொஞ்சம் நாளைக்கி தான் அப்புறம் என் அருமை மனைவி வந்துடுவா அப்புறம் ஒன்லி ஹெல்பிங் தான் நம்ம வேலை.

நம்பிக்கை தான் வாழ்கை அதுனால என் மனைவி விசா சீக்கிரம் வந்துடும்னு நம்பிக்கையோடு இன்னும் கொஞ்சம் நாள் இந்த மாதிரி வாழ்க்கைய ஓட்டபோறேன் !!!

No comments: