Tuesday 4 May 2010

கல்ல கண்டா நாய காணோம்!

என்னடா தலைப்பே ஒரு மாதிரி இருக்குனு பாக்குறீங்களா? ஆமாங்க கொஞ்சம் குண்டக்க மண்டக்க தான் லைப்ம் போயிட்டு இருக்கு. லண்டன்ல ராஜா மாதிரி வாழ்ந்துட்டு இருந்தேன் கொஞ்சம் நாள். எல்லாமே ரொம்ப நல்ல போயிட்டு இருந்தது. உண்மைய சொல்லனும்னா லண்டன் வந்த புதுசுல சுத்தமா புடிக்கல அந்த லைப் ஸ்டைல் அப்புறம் நாள் போக போக நாமளும் லண்டன் வாசியாவே மாறியாச்சி. பிரெண்ட்ஸ் கூட கார்ல சுத்துறதும், இந்தியன் ஹோடெல்லா பார்த்து நல்லா மூக்கு பிடிக்க சாப்புடுறது சூப்பர் ரா போயிட்டு இருந்தது லைப். லைட் டா ஒரு சந்தோசம் வந்துச்சி சரி இந்த ஊரு செட் ஆயிடிச்சி அப்படியே கொஞ்ச நாள் ஆட்டைய போடலாம்னு.

எங்க இருந்து தான் நம்மள வாட்ச் பண்னுவான்கனே தெரியல, திடீரின்னு சென்னை போக வேண்டிய ஒரு நிலைமை வந்துச்சி. சரி போதும் போடா இந்த ஊரு, பேசாம இந்திய போய் நிம்மதியா இருக்கலாம்னு பொட்டிய கட்டிட்டு ஓடி வந்துட்டேன் இந்தியாக்கு. வந்து ஒரு வருஷம் நல்ல தான் போயிட்டு இருந்துச்சி. இப்படியே ஆபீஸ் விட்டா வீடு, வீடு விட்டா ஆபீஸ், அப்புறம் வார கடசில ஒரு சினிமா, பீச், ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ பசங்களோட ஒரு சின்ன டூர்னு சுகமா போயிட்டு இருக்கேன்னு நெனச்சேன். மறுபடியும் ஆட்டைய கலைக்க ஆளு வந்தாச்சி.

இவ்வளவு நாள் சும்மா இருந்த க்ளின்ட் ஏன்டா அப்பா அங்க சந்தோசமா இருக்க இங்க வந்துடுன்னு சொல்லிட்டான். நம்ம பொழப்பு தான் நாய் பொழப்பா போச்சின்னு நெனச்சிகிட்டு மறுபடியும் பொட்டிய கட்டிட்டு ஜெர்மனி வந்துட்டேன். வடிவேலு மாதிரியே நம்மள டீல் பண்ற மாதிரி ஒரு பீலிங். இந்த தடவ உஷார இருப்பேன், எப்ப இந்த ஊரு ஓகே னு தோணுதோ அப்பவே ரெடி ஆயிடுவேன் இந்திய போக

பின் குறிப்பு: ஓடுறவன தான் விதி தூரத்தும் னு யாரோ சொன்னது நியாபகத்துக்கு வருது

No comments: