Friday, 18 April 2008

Phoenix பறவை...

என் காதலை சொன்ன நிமிடத்தில்
உன் கோப பார்வையில் என்னை எரித்துவிட்டாய்
உனக்கு தெரியாதா நான் Phoenix பறவை என்று?

Wednesday, 16 April 2008

கண்ணீர்...

உலகில் மிகவும் விலை உயர்ந்த பொருள்
உன் கண்ணீர் என்று இன்று தான் கண்டு கொண்டேன்
நேற்று நீ சிந்திய இரு துளி கண்ணீரால்
என் வங்கி கணக்கில் இரண்டு லட்சம் காணாமல் போனது
நீ கேட்ட வைர அட்டிகை என் சட்டைப்பையில்

Monday, 14 April 2008

முதிர்கன்னிகள்...

வரதட்சணை பணம் பார்த்தபின் தாலி கட்டும்
ஆண் விபச்சாரிகள் இருப்பதாலே
பல கண்ணகிகள் முதிர்கன்னிகளாக இருக்கிறார்கள்

முதியோர் இல்லம்...

சரஸ்வதி முதியோர் காப்பகம்
பெயர் பலகையை பார்த்தும் பளீர் என்று இதயத்தில் ஒரு வலி
அப்பா அட்மிஷன் வாங்கிட்டேன்
மாதம் ஒரு முறை வந்து பார்த்துட்டு போகிறேன்
புன்னகையுடன் என் மகன் என்னிடம் கூறினான்
முப்பது வருடத்திற்கு முன்னால் நான் கூறிய அதே வார்த்தைகள்
ஒரு சின்ன சந்தோஷம் என் பேரன் இன்று இங்கே இல்லை

Friday, 11 April 2008

அகதி...

விடுமுறைக்கு நீ ஊருக்கு சென்றாய்
என் மனதுக்குள் நான் நாடு கடத்தப்படேன்
இன்னும் எத்தனை நாள் இந்த அகதி வாழ்க்கை
என் தாய்நாடே உன்னை எப்போது காண்பேன்?

சிலுவை...

உன் திருமண அழைப்பிதழ் கொண்டு
என்னை சிலுவையில் அறைந்தாய்
மூன்று வருடங்கள் ஆகிவிட்டது
இன்னும் உயிர்த்து எழவில்லை நான்.

Wednesday, 9 April 2008

Appraisal Rating …

Can anyone tell me the secret of getting good rating during the performance rating?

I am damn sure that it is not at all related to Performance, Hardwork etc (at least in majority of the cases).